திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதியில், கடந்த, 2016 தேர்தலில் மூன்று பெண்கள் உட்பட, 15 பேர் போட்டியிட்டனர். இவர்களில், ஏழு பேர் சுயேச்சைகள். ஏழு சுயேச்சைகள், மொத்தம், 1.32 சதவீதம் ஓட்டுகள் பெற்றனர்.தற்போது, இத்தொகுதியில், 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; இவர்களில், 19 பேர் சுயேச்சைகள். மாவட்டத்தில் அதிக சுயேச்சை வேட்பாளர் போட்டியிடும் தொகுதி இதுவே. கடந்த முறை சுயேச்சை ஒவ்வொருவரும், 200 முதல், 750 ஓட்டு வரை பெற்றுள்ளனர். இந்த முறை, 19 பேர் போட்டியிடுவதால், குறைந்தபட்சம், 5,000 ஓட்டுகளை இவர்கள் பிரிப்பர். இவை, தங்களுக்கு பாதகமாக முடியுமோ என்ற அச்சம், அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட கட்சி வேட்பாளர்களிடம் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE