நினைச்சு பாருங்க கரன்ட் கட் :வேட்பாளர் தருகிறார் ஷாக் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நினைச்சு பாருங்க 'கரன்ட் கட்' :வேட்பாளர் தருகிறார் 'ஷாக்'

Added : ஏப் 04, 2021
Share
திருப்பூர் வடக்கு தொகுதியில், கிராமங்கள் அதிகம். கிராமப்புற பெண்களிடம் ஓட்டு சேகரிக்கும், அ.தி.மு.க., வேட்பாளரான 'சிட்டிங்' எம்.எல்.ஏ., விஜயகுமார், தி.மு.க., ஆட்சியின்போது நிலவிய மின்வெட்டை 'மலரும் நினைவு' போல பேசுகிறார்.''வெயில் கொளுத்தீட்டு இருக்குது... இந்த நேரத்துல, 'கரன்ட் கட்' ஆனா எப்படி இருக்கும்னு நெனச்சு பாருங்க... காலைல சாப்பாடு செய்ய முடியாம, சட்னி அரைக்க

திருப்பூர் வடக்கு தொகுதியில், கிராமங்கள் அதிகம். கிராமப்புற பெண்களிடம் ஓட்டு சேகரிக்கும், அ.தி.மு.க., வேட்பாளரான 'சிட்டிங்' எம்.எல்.ஏ., விஜயகுமார், தி.மு.க., ஆட்சியின்போது நிலவிய மின்வெட்டை 'மலரும் நினைவு' போல பேசுகிறார்.''வெயில் கொளுத்தீட்டு இருக்குது... இந்த நேரத்துல, 'கரன்ட் கட்' ஆனா எப்படி இருக்கும்னு நெனச்சு பாருங்க... காலைல சாப்பாடு செய்ய முடியாம, சட்னி அரைக்க முடியாம, மாவு ஆட்ட முடியாம எவ்வளவு சிரமப்பட்டீங்க, அப்ப... பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள எவ்வளவு கஷ்டப்பட்டீங்க... ஒவ்வொருத்தரும் அதைய நினைச்சு பார்த்துட்டு அப்புறமா ஓட்டுப்போடுங்க...'' என்று பேசுகிறார், விஜயகுமார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X