சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய பெட்டி பெட்டியாக மது பாட்டில்: அ.தி.மு.க., நிர்வாகி, மருமகன் கைது

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
அவிநாசி,:அவிநாசி அருகே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வீட்டில் பெட்டி, பெட்டியாக பதுக்கிவைக்கப்பட்ட, 2,051 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அ.தி.மு.க., நிர்வாகியும், மருமகனும் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன், 57; அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர். அவரது மனைவி பேபி; சேவூர் ஊராட்சி மன்ற
 வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய பெட்டி பெட்டியாக மது பாட்டில்: அ.தி.மு.க., நிர்வாகி, மருமகன் கைது

அவிநாசி,:அவிநாசி அருகே, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வீட்டில் பெட்டி, பெட்டியாக பதுக்கிவைக்கப்பட்ட, 2,051 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அ.தி.மு.க., நிர்வாகியும், மருமகனும் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன், 57; அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர். அவரது மனைவி பேபி; சேவூர் ஊராட்சி மன்ற உறுப்பினர். அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளராகவும் உள்ளார்.இவர்களது வீட்டில் மது பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் பார்வையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஊத்துக்குளி பி.டி.ஓ., சாந்திலட்சுமி தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, முருகேசன் வீட்டில் உள்ள குடோனில் ஆய்வு செய்தபோது, பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தன; பிராந்தி, பீர் பாட்டில்கள் என, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பி.டி.ஓ., சாந்திலட்சுமி அளித்த புகாரின்படி, சேவூர் போலீசார், முருகேசன், அவரது மருமகன் ஐயப்பன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில், 'மதுபாட்டில்கள், தேர்தலுக்கு, வாக்காளர்களுக்கு வழங்க, சிறிது சிறிதாக 'டாஸ்மாக்' கடைகளில் இருந்து வாங்கி பதுக்கி வைக்கப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X