திருப்பூர் தெற்கு தொகுதி 'நாம் தமிழர்' கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், நேற்று காலேஜ் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள பெட்ரோல் பங்க் சென்றார். பங்க் நிர்வாகியிடம், அனுமதி பெற்று, அங்கு வந்த கார் மற்றும் டூவீலர்களுக்கு 'பம்ப்' பிடித்து பெட்ரோல் அடித்த அவர், அவர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து, ஓட்டு போடுமாறு கூறினார். சில நாட்கள் முன், கல்லுாரி மைதானத்தில், கிரிக்கெட் விளையாடி, இவர் ஓட்டு சேகரித்தார்.ஒரு வேட்பாளர், பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருந்ததை பார்த்து, அவரே களத்தில் இறங்கி, துணிகளை துவைத்து, தனக்கு ஆதரவு கேட்டது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE