பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு கூட்டமைப்பு அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
'அத்திக்கடவு திட்டம் பயன் பெறும் ஒன்பது தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு' என, அத்திக்கடவு கூட்டமைப்பு மூத்த ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில், பவானி ஆற்று நீரை கொண்டு நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற, அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு, பல ஆண்டுகளாக போராடி வருகிறது.இந்த

'அத்திக்கடவு திட்டம் பயன் பெறும் ஒன்பது தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு' என, அத்திக்கடவு கூட்டமைப்பு மூத்த ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில், பவானி ஆற்று நீரை கொண்டு நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற, அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு, பல ஆண்டுகளாக போராடி வருகிறது.இந்த கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொங்குமண்டல மக்களின், 60 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற உள்ளதால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உள்ளடக்கிய மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலுார், கவுண்டம்பாளையம், திருப்பூர் (வடக்கு), பெருந்துறை, பவானிசாகர், காங்கேயம், கோபி உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு, முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X