கோவை:தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.,க்களுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.மேற்கு மண்டல ஐ.ஜி., தினகரன் மாற்றப்பட்டு, அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். புதிய ஐ.ஜி., பொறுப்பேற்றதும், நேற்று மேற்கு மண்டலத்திலுள்ள எட்டு மாவட்ட எஸ்.பி.,க்களுடன், காணொலியில் கலந்துரையாடினார்.அப்போது, 'அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் விதிமீறல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எவ்விதமான தேர்தல் விதிமீறல்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE