பொது செய்தி

தமிழ்நாடு

பணம் தருவோரை போட்டோ எடுங்க! வாக்காளர்களுக்கு கமல் வேண்டுகோள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவை:''பணம் கொடுக்க வருவோர் முகத்தை 'போட்டோ' எடுத்து எனக்கு அனுப்பிவையுங்கள். போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு நான் காபி குடிக்க வருவேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் பேசினார்.ம.நீ.ம., சிங்காநல்லுார் தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மசக்காளிபாளையம், வரதராஜபுரம், சிங்காநல்லுார், கள்ளிமடை உள்ளிட்ட பகுதியில் அக்கட்சி தலைவர் கமல் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது, கமல்

கோவை:''பணம் கொடுக்க வருவோர் முகத்தை 'போட்டோ' எடுத்து எனக்கு அனுப்பிவையுங்கள். போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு நான் காபி குடிக்க வருவேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் பேசினார்.ம.நீ.ம., சிங்காநல்லுார் தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மசக்காளிபாளையம், வரதராஜபுரம், சிங்காநல்லுார், கள்ளிமடை உள்ளிட்ட பகுதியில் அக்கட்சி தலைவர் கமல் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது, கமல் பேசியதாவது:ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் 'கிரிமினல்' மட்டுமல்ல; மக்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகள் களவாட வந்தவர்கள். தேர்தலுக்கு பணம் கொடுத்து, உங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.நீண்டகால விளைவை எண்ணி மக்கள் பணத்தை மறுக்க வேண்டும். அப்படி மறுத்தால் சரித்திரத்தில் பேசப்படும். நான் ஜனநாயகத்தை தோளில் சுமப்பவன். பணம் தரும் கட்சிகள் பண நாயகத்தை சுமப்பவர்கள். தமிழகத்தை சீரமைக்க மக்களின் பங்களிப்பு வேண்டும்.பணம் கொடுக்க வருவோர் முகத்தை தெளிவாக தெரியும்படி, 'போட்டோ' எடுத்து எனக்கு அனுப்பிவையுங்கள். அவ்வாறு போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு நான் காபி குடிக்க வருவேன். நேர்மையாக இருக்க கூடிய வாக்காளர்கள் என் சொந்தங்கள். உங்கள் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X