சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் மூழ்கி, கோவையை சேர்ந்த ஒருவர் இறந்தார்; ஒருவரை தேடி வருகின்றனர்.கோவை சிவானந்தா காலனி சேர்ந்த கணேசன், 42, ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த மாணிக்கம், 37, உட்பட ஐந்து பேர், காரில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வந்தனர். வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள, உயர்மட்ட பாலத்தின் மீது நின்று கொண்டு, 'செல்பி'

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் மூழ்கி, கோவையை சேர்ந்த ஒருவர் இறந்தார்; ஒருவரை தேடி வருகின்றனர்.கோவை சிவானந்தா காலனி சேர்ந்த கணேசன், 42, ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த மாணிக்கம், 37, உட்பட ஐந்து பேர், காரில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வந்தனர். வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள, உயர்மட்ட பாலத்தின் மீது நின்று கொண்டு, 'செல்பி' எடுத்துள்ளனர்.அப்போது கணேசன் ஆற்று தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற, உடன் வந்த மாணிக்கம் குதித்துள்ளார். இருவரும் தண்ணீரில் மூழ்கினர். கணேசனை காப்பாற்றி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணிக்கத்தை தீயணைப்புத் துறையினர், தேடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X