எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்தம் போட்டு ஓட்டுக்கு நோட்டு: கோவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள்...

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
''அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்...பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!'' என்று வடிவேலு பாணியில் வாய்ச்சொல் ஒப்பந்தம் போட்டு, கோவையில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை அமோகமாக நடத்திவருகின்றனர்.கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கும், தி.மு.க., கூட்டணிக்கும் இடையே கடுமையான
கோவை, ஒப்பந்தம், நோட்டு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பணப்பட்டுவாடா

''அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்...பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!'' என்று வடிவேலு பாணியில் வாய்ச்சொல் ஒப்பந்தம் போட்டு, கோவையில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை அமோகமாக நடத்திவருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கும், தி.மு.க., கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. எந்தக் கட்சி வேட்பாளர் வென்றாலும், மிகக்குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடியுமென்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. இதனால் பணத்தை வாரியிறைத்து, அந்த வித்தியாசத்தை நீக்கி, வெற்றி பெற்றுவிடலாமென்று இரண்டு கூட்டணியிலுள்ள கட்சியினரும் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக மட்டுமின்றி, தங்களுடைய கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவும் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

பிரதானக் கூட்டணி வேட்பாளர்களில் செலவு செய்ய முடியாமல் இருக்கும் வேட்பாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிற அளவுக்கு, கோவையில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் பலமான வசதி படைத்தவர்களாகவுள்ளனர். கட்சித்தலைமை கொடுத்த பணத்துடன் சேர்த்து, தங்கள் பணத்தையும் போட்டு வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களைப் பொறுத்தவரை, ஓட்டுக்கு 500 வீதமும், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் ஓட்டுக்கு, 1,000 வீதமும் பணம் தருவதாக தகவல்கள் வருகின்றன.

வி.ஐ.பி.,க்கள் தொகுதிகளான தொண்டாமுத்துார், கோவை தெற்கு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில், ஓட்டுக்கு இதை விட அதிகமாக பணப்பட்டுவாடா இருக்குமென்று தகவல் பரவியது.

குறிப்பாக, தொண்டாமுத்துார் தொகுதியில் ஆளும்கட்சி சார்பில் ஓட்டுக்கு 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது என்று திட்டமிட்டு சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டன.கொடுக்கும் தொகையை பல மடங்கு அதிகமாக்கி, எதிர்க்கட்சியினர் தகவல் பரப்பி விடுகின்றனரே தவிர, எந்தவொரு பகுதியிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை யாரும் பிடித்துத் தருவதில்லை. இரண்டு கட்சியினருக்கும் இடையில் இது எழுதப்படாத ஒப்பந்தமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே மீதமிருக்கும் நிலையில், சில தொகுதிகளில் இன்னும் அதிகமான பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதில் அதிகாரிகளுக்கு இடையில் இன்னும் குழப்பம் நீடிப்பதால், எந்தக் கட்சியினர் புகார் கொடுத்தாலும் அவர்களும் அதைப் பிடிப்பார்களா அல்லது பிடிப்பது போல நடிப்பார்களா என்பதும் சந்தேகத்துக்குரிய கேள்விதான்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-202112:41:02 IST Report Abuse
Shaikh Miyakkhan வாழ்த்துக்கள் ஜனநாயக கடமைக்கு
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-ஏப்-202107:49:46 IST Report Abuse
RajanRajan இதெல்லாம் பார்க்கும் போது பெரும்பான்மை அரசியல்வாதிகள் தான் இந்த தேசத்தில் சட்டபூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது நிதர்சனமான உண்மை. ஒன்னு அரசியல்வாதிகளின் டீசென்சி கோட் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்க பட வேண்டும் அல்லது மக்கள் நேர்மையானவர்களாக நடக்க வேண்டும். முந்தையது ஓன்று தான் அமல்படுத்த தக்கது. எனவே பிஜேபி பொலிடிகல் ரிபார்ம் பணியை முன்னெடுக்க வேண்டும். வாழ்த்துக்கள். வந்தே மாதரம்.
Rate this:
Cancel
raj - salem,இந்தியா
04-ஏப்-202121:46:39 IST Report Abuse
raj மக்கள் பணம் வாங்கும் வரை அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X