ம.நீ.ம.,வுக்கு எதிராக சதி: துணைத்தலைவர் பொன்ராஜ் பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ம.நீ.ம.,வுக்கு எதிராக சதி': துணைத்தலைவர் பொன்ராஜ் பேட்டி

Added : ஏப் 04, 2021
Share
கோவை:''சட்டசபைக்குள் ம.நீ.ம.,கட்சியினரை உள்ளே விடக்கூடாது என்பதற்காக சில கட்சிகள் சதி செய்கின்றன,'' என, துணைத்தலைவர் பொன்ராஜ் கூறினார்.ம.நீ.ம., துணைத் தலைவர் பொன்ராஜ் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாக வெளியிடப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியில் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள்

கோவை:''சட்டசபைக்குள் ம.நீ.ம.,கட்சியினரை உள்ளே விடக்கூடாது என்பதற்காக சில கட்சிகள் சதி செய்கின்றன,'' என, துணைத்தலைவர் பொன்ராஜ் கூறினார்.ம.நீ.ம., துணைத் தலைவர் பொன்ராஜ் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாக வெளியிடப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியில் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.மதம், ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்தி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகள் வெற்றிபெற துடிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் நேர்மையான கட்சி. மனசாட்சியுடன், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். சட்டசபைக்குள் ம.நீ.ம., கட்சியினரை உள்ளே விடக்கூடாது என்பதற்காக சில கட்சிகள் சதி செய்கின்றன.அவர்கள் பணத்தால் மக்களை ஈர்க்கப்பார்க்கின்றனர். தற்போது, மக்கள் தெளிவாக இருக்கின்றனர்; பணத்துக்கு விலைபோக மாட்டார்கள். தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X