சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிகளை கடைபிடிக்காத தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவை:உதயநிதி பிரசாரத்தின்போது, விதிகளை பின்பற்றாத தி.மு.க.,வினர் மீது தொண்டாமுத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, கடந்த, 2ம் தேதி தொண்டாமுத்துார் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., நிர்வாகி மயில்வாகனன்

கோவை:உதயநிதி பிரசாரத்தின்போது, விதிகளை பின்பற்றாத தி.மு.க.,வினர் மீது தொண்டாமுத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, கடந்த, 2ம் தேதி தொண்டாமுத்துார் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., நிர்வாகி மயில்வாகனன் செய்திருந்தார்.அனுமதி பெறாமல், கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 1,300க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்; சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. இத்தகைய விதிமீறல்களுக்காக, மயில்வாகனன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் மீது தொண்டாமுத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X