சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், 150 அடி உயர மொபைல் டவர் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீட்கப்பட்டார்.பல்லடம், காரணம்பேட்டையை சேர்ந்தவர் குருசாமி, 48; லாரி டிரைவர். இவர் நேற்று கோவை, சிங்காநல்லுார் திருச்சி ரோட்டிலுள்ள, 150 அடி உயர மொபைல்போன் டவர் மீது ஏறி கீழே குதிக்க போவதாக கத்தினார். சிங்காநல்லூர் போலீசார், தீயணைப்பு மீட்பு வாகனத்துடன் விரைந்து சென்று குருசாமியை கீழே இறங்க

கோவை:கோவையில், 150 அடி உயர மொபைல் டவர் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீட்கப்பட்டார்.பல்லடம், காரணம்பேட்டையை சேர்ந்தவர் குருசாமி, 48; லாரி டிரைவர். இவர் நேற்று கோவை, சிங்காநல்லுார் திருச்சி ரோட்டிலுள்ள, 150 அடி உயர மொபைல்போன் டவர் மீது ஏறி கீழே குதிக்க போவதாக கத்தினார். சிங்காநல்லூர் போலீசார், தீயணைப்பு மீட்பு வாகனத்துடன் விரைந்து சென்று குருசாமியை கீழே இறங்க வலியுறுத்தினர்.ஆனால் இறங்க மறுத்தவர், தனது மனைவியுடன் சேர்த்து வைக்க சொல்லி போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் கீழே இறங்க மறுத்தவரிடம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமாதான பேச்சு நடத்தி கீழே அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். தற்கொலை முயற்சிகளில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X