கோவையில் சிறுகுறு தொழில்பேட்டை: வடக்கு தொகுதிக்கு ம.நீ.ம., தேர்தல் வாக்குறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சிறுகுறு தொழில்பேட்டை: வடக்கு தொகுதிக்கு ம.நீ.ம., தேர்தல் வாக்குறுதி

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை:கோவை வடக்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில், தங்கவேலு போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கென பிரத்யேகமாக, தேர்தல் அறிக்கையை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேற்று வெளியிட்டார்.அதில் கூறியிருப்பதாவது:அனைத்து பகுதிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். வேளாண் பலகலை வல்லுனர்கள் உதவியுடன், வீடுகளில், மாடியில் விவசாயம் செய்ய, பெண்களுக்கு வழிமுறை

கோவை:கோவை வடக்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில், தங்கவேலு போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கென பிரத்யேகமாக, தேர்தல் அறிக்கையை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேற்று வெளியிட்டார்.அதில் கூறியிருப்பதாவது:அனைத்து பகுதிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். வேளாண் பலகலை வல்லுனர்கள் உதவியுடன், வீடுகளில், மாடியில் விவசாயம் செய்ய, பெண்களுக்கு வழிமுறை கற்றுத்தரப்படும். கணபதியில் சிறுகுறு தொழில்பேட்டை அமைக்கப்படும்.பொருளாதார உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்க மொபைல் செயலி, மருதமலையில் ரோப் கார் வசதி, சங்கனுார் ஓடை துார்வாறுதல், கணபதியில் பஸ் ஸ்டாண்ட், தொழில்திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா, கூடுதல் உழவர் சந்தை, இரவு நேர பணியாளர்களுக்கு பஸ் வசதி, லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் சுரங்க வழிப்பாதை, கணபதி - சரவணம்பட்டி வரை மேம்பாலம் கட்டப்படும்.தாவரவியல் பூங்காவில் பட்டாம்பூச்சி வீடு, தேனீ வளர்ப்பு மையம், மூலிகை பூங்கா ஏற்படுத்தப்படும். பாரதியார் பல்கலைக்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு, இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்பன உள்ளிட்ட, 26 அம்ச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.'அற்புதமான திட்டங்கள்'மளிகை, தங்க நகை என பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினரை, கோவை வைசியாள் வீதியில் உள்ள கலையரங்கில் கமல் நேற்று சந்தித்தார். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, 'மல்டிலெவல் பார்க்கிங்' வசதி, ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.கமல் பேசுகையில்,''உங்கள் வியாபாரத்தின் வெற்றிக்கு முக்கிய மூலதனம் வாடிக்கையாளர்களிடம் காட்டும் நேர்மை. அதேபோல், உழைப்பு மற்றும் நேர்மையுடன் ம.நீ.ம., செயல்பட்டு வருகிறது. ஒரு மாதம் கழித்து அற்புதமான திட்டங்களுடன் உங்களை சந்திப்பேன்,'' என்றார்.தொடர்ந்து, லங்கா கார்னர் பகுதியை பார்வையிட்ட கமலிடம் போக்குவரத்து நெரிசல், ரயில்வே பாலத்தின் கீழ் மழைக்காலத்தில் தண்ணீர் புகுவது உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து ரயில்வே பயணிகள் சங்கத்தினர் எடுத்துரைத்தனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை பார்வையிட்ட அவரிடம், பயணிகளின் தேவை குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X