கோவைக்கு என்ன செய்தார் ஸ்டாலின்? அமைச்சர் வேலுமணி கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு என்ன செய்தார் ஸ்டாலின்? அமைச்சர் வேலுமணி கேள்வி

Added : ஏப் 04, 2021
Share
கோவை:''100 நாளில் அதை செய்வேன்; இதை செய்வேன் என பேசுகிறார். 2006ல் துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவைக்கு என்ன செய்தார்,'' என, அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.கோவை தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ராமநாதபுரம் பகுதியில், அவர் பேசியதாவது:தொழில்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் திட்டங்களுக்கு, உதவிகரமாக

கோவை:''100 நாளில் அதை செய்வேன்; இதை செய்வேன் என பேசுகிறார். 2006ல் துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவைக்கு என்ன செய்தார்,'' என, அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.கோவை தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ராமநாதபுரம் பகுதியில், அவர் பேசியதாவது:தொழில்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் திட்டங்களுக்கு, உதவிகரமாக இருந்து செயல்படுபவர் வானதி சீனிவாசன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் எந்த பணிகளையும் செய்யவில்லை. ஏனென்றால் அவருக்கு எதுவுமே தெரியாது. நுாறு நாளில் அப்படி பண்ணுவேன்; இப்படி பண்ணுவேன் என்கிறார். 2006ல் தமிழகத்தில் தி.மு.க.,வும், மத்தியில் காங்., கட்சியும் ஆண்டபோது, துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார்.நாங்கள் செய்ததை சொல்கிறோம்; தைரியமாக மக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறோம். தி.மு.க.,வினரால் முடியுமா? ஏதாவது செய்திருந்தால் தானே சொல்ல முடியும்.இவ்வாறு, வேலுமணி பேசினார்.வானதி சீனிவாசன், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, பாதயாத்திரையாக சென்று, கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவர் பேசுகையில்,''தி.மு.க.,வினர் பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.அவருக்கு, இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத் மலர்மாலை அணிவித்தும், மலர் துாவியும் வரவேற்றார். அ.தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் அவருடன் சென்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X