கோவை:''கோவை டி.கே., மார்க்கெட் நவீனப்படுத்தப்பட்டு, மல்டிலெவல் பார்க்கிங் அமைத்துக்கொடுப்பேன்,'' என்று வியாபாரிகளிடம் தெற்கு தொகுதி வேட்பாளர் கமல் உறுதி கூறினார்.கோவை வைசியாள் வீதியில் தெற்கு தொகுதி ம.நீ.ம.,வேட்பாளர் கமல் அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.பின்னர், அவர் வர்த்தகர்களிடம் கூறுகையில், ''நீங்கள் அளித்த கோரிக்கைகளை நான் பொறுப்புக்கு வந்த பின் நிறைவேற்றுவேன். டி.கே.மார்க்கெட் வளாகம் நவீனப்படுத்தப்படும். மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கப்படும், அனைத்து அங்காடி கடைகளும் புனரமைக்கப்படும். வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் நீண்ட நாட்களாக வைத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும்,'' என்றார்.கோவை மளிகை வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் விஜய்குமார், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சுல்தான், செயலாளர் சரவணகுமார், தமிழக வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் தியாகராஜன், ராமராஜ், கோவை நகை உற்பத்தியாளர் சங்க நிர்வாகி முத்துவெங்கட்ராம், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர், கமலுடன் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE