பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்., 6ல் 'லீவு' விடாத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க போன் எண்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: வரும், 6ம் தேதி ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது புகார் அளிப்பதற்காக, அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது குறித்து, தொழிலாளர் துறை விடுத்த செய்தி குறிப்பு:தேர்தல் நாளான, ஏப்., 6ம் தேதி, அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை

சென்னை: வரும், 6ம் தேதி ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது புகார் அளிப்பதற்காக, அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது குறித்து, தொழிலாளர் துறை விடுத்த செய்தி குறிப்பு:தேர்தல் நாளான, ஏப்., 6ம் தேதி, அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், புகார் தெரிவிக்க, சென்னையில், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்த புகார்களை, ரேவதி, தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம், சென்னை - 98402 49504; தாசரதி, தொழிலாளர் உதவி ஆய்வரிடம், 98412 08118, 79048 93374, 77084 87415 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கூடுதல் இயக்குனர், சென்னை விடுத்துள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலை நிறுவனங்களும், கட்டடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, ஏப்., 6ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.சட்ட விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் தெரிவிக்க, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள், கார்த்திகேயன், சென்னை, கும்மிடிப்பூண்டி தாலுகா -94442 21011. சரவணன், அம்பத்துார், சென்னை - 98434 31020 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.கவிதா, கிண்டி - 91596 62409; ஜெயகுமார்,சென்னை, தாம்பரம் தாலுகா - 91762 22394; பாலு, திருவொற்றியூர், பொன்னேரி தாலுகா - 94869 18205. குமார், திருவள்ளூர் மாவட்டம் - 94440 02025; இளங்கோவன், காஞ்சிபுரம் மாவட்டம் - 94431 69506; ஜவகர், கட்டடம் மற்றும் கட்டுமானம் - 94440 02441 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.அவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில், மேற்கூறிய அதிகாரிகளால், அந்நிறுவனங்கள் மீது தகுந்த, குற்ற நடவடிக்கை தொடரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், ஏப்., 6ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இயக்க இணை இயக்குனர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X