பிக் பஜாரில் ரூ 2500க்கு பொருட்கள் வாங்கினால் ரூ 500 மதிப்பிலான பழங்கள் காய்கறிகள் இலவசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிக் பஜாரில்' ரூ 2500க்கு பொருட்கள் வாங்கினால் ரூ 500 மதிப்பிலான பழங்கள் காய்கறிகள் இலவசம்

Added : ஏப் 04, 2021
Share
சென்னை: பிக் பஜார் ஹைப்பர் மார்க்கெட்டில், 2,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், 500 ரூபாய் மதிப்பிலான, பழங்கள் மற்றும் காய்கறிகள் இலவசம் என்ற, மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பிக் பஜார் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில், தமிழ் புத்தாண்டு,

சென்னை: பிக் பஜார் ஹைப்பர் மார்க்கெட்டில், 2,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், 500 ரூபாய் மதிப்பிலான, பழங்கள் மற்றும் காய்கறிகள் இலவசம் என்ற, மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பிக் பஜார் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில், தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷூ, ஆந்திராவில் யுகாதி என, பல்வேறு மாநிலங்களின் புத்தாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், பிக் பஜாரில், மிகப்பெரிய சலுகை என்ற தலைப்பில், விழாக்கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பிக் பஜார் ஹைபர் மார்க்கெட்டில், 2,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், 500 ரூபாய் மதிப்பிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் இலவசமாக வழங்கப்படும். முதல்முறையாக இதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பிக் பஜார் ஹைப்பர் மார்க்கெட்டில்மட்டுமல்லாமல், அதன் �ஆன்லைன்' வாயிலாக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். ஏப்., 1 வழங்கப்படும் இந்த சலுகை, ஏப்., 14ம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X