சென்னை: சோழிங்கநல்லுார், ஆலந்துார் தொகுதிகளில், சில நாட்களாக, தினசரி இரவில், அரை மணிநேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்படுவது, பணப் பட்டுவாடாவிற்காகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சில நாட்களாக, கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வீடுகளில் மின் விசிறி, ஏசி இயங்காமல் இருக்க முடியவில்லை.இரவில், சில நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டாலும், மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். மின் தடை ஏற்பட்டு ஜன்னலை திறந்தால், காற்றுக்கு பதில், கொசுக்கள் படையெடுத்து விடுகின்றன.இவற்றில் இருந்து, 'இன்வெர்ட்டர்' வைத்துள்ள, 20 சதவீதம் மக்கள் மட்டுமே தப்புகின்றனர். தற்போது, தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறியுள்ளது.இந்நிலையில், மின் வினியோக வழித்தடம், துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டால் மட்டுமே, மின் தடை ஏற்படும்.ஆனால், சில நாட்களாக சோழிங்கநல்லுார், ஆலந்துார் தொகுதிகளில், இரவு நேரத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், பிரதான கட்சிகள் இரண்டும் தீவிர பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ளன.இந்நிலையில், இரவு தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுத்துவது, பண பட்டுவாடாவிற்காகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிட்டி போஸ்டர்//
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE