சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறிப்பில் ஈடுபட்ட ஐவர் கைது

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்.நகர்: டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தவரிடம் தகராறு செய்து, செயின் பறித்துச் சென்ற, ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம்., கார்டனைச் சேர்ந்தவர் நவீன்குமார், 29. நேற்று முன்தினம் மதியம், தனது நண்பருடன் வீட்டிற்கு அருகே உள்ள டாஸ்மாக் பாரில், மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கு அருகே மது அருந்திக்

எம்.ஜி.ஆர்.நகர்: டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தவரிடம் தகராறு செய்து, செயின் பறித்துச் சென்ற, ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம்., கார்டனைச் சேர்ந்தவர் நவீன்குமார், 29. நேற்று முன்தினம் மதியம், தனது நண்பருடன் வீட்டிற்கு அருகே உள்ள டாஸ்மாக் பாரில், மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கு அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், சிகரெட் புகைத்து, புகையை அவர் மீது விட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், நவீன்குமாரை தாக்கி, அவர் அணிந்திருந்த, 2.5 சவரன் செயினை பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், கே.கே.நகரைச் சேர்ந்த முரளி, 31, லோகு, 22, ஏழுமலை, 19 மற்றும், 16 வயது சிறுவர்கள் இருவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 2.5 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X