கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட் அருகே, தீப்பிடித்த சமையல் காஸ் சிலிண்டரை, மர்ம நபர் சாலையில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திராவிலிருந்து, வெங்காயம் ஏற்றி, நேற்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்தது. வெங்காய மூட்டைகளை இறக்கி வைத்து, லாரியின் பின்புறம் சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி, காலை உணவு சமைத்துக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென காஸ் சிலிண்டரில் தீப்பற்றி எரிய துவங்கியது. உடனே மர்ம நபர், சற்றும் யோசிக்காமல், எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை, நடுரோட்டில் வீசினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அலறியடித்து ஓடினர்.சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு படையினர், சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து,சிலிண்டரை நடுரோட்டில் வீசியது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE