சென்னை: தாம்பரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 'பூத் சிலிப்' வழங்குவதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தேர்தலில் ஓட்டளிக்க தகுதியான நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருக்கும். இதில், பெயர் இருந்தாலும், அடையாள சான்றுடன் சென்றால் மட்டுமே ஓட்டளிக்க முடியும்.பெரும்பாலான மக்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயர் எங்கு இடம் பெற்றுள்ளது என்ற தகவல்கள், பூத் சிலிப்பாக வழங்கப்படும்.அந்த குறிப்பிட்ட வாக்காளரின் பெயர், எந்த பாகத்தில், எந்த வரிசை எண்ணில் உள்ளது என்பதை அறிய, இது உதவும். பொதுவாக ஓட்டுப்பதிவுக்கு, ஐந்து நாட்கள் முன்னர், இந்த சிலிப்கள், தேர்தல் பணியாளர்கள் வாயிலாக வினியோகிக்கப்படும்.ஆனால், இந்த முறை, இதுவரை இதற்கான பணிகள் பல இடங்களில் துவங்கவில்லை என, கூறப்படுகிறது. அந்தந்த பகுதி மக்கள், உள்ளாட்சி அமைப்பிலும், வருவாய் துறை அலுவலர்களிடமும், இது குறித்து விசாரித்தாலும், உரிய பதில் வருவதில்லை.இது குறித்து, தாம்பரத்தைச் சேர்ந்த பல்வேறு குடியிருப்போர் சங்கங்கள், தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு புகார்களை அனுப்பி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE