பொது செய்தி

தமிழ்நாடு

காங்., பெயரில் பா.ஜ., பிரசாரம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
'காங்கிரஸ் பெயரில், மொபைல் எண்ணிற்கு வந்த அழைப்பில், பா.ஜ., வேட்பாளர் பேசுவது போல, குரல் பதிவு செய்யப்பட்டு பிரசாரம் செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், காங்., புகார் அளித்துள்ளது.துறைமுகம் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு, சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சிவராஜசேகரன் அனுப்பியுள்ள மனு:துறைமுகம் தொகுதியில் உள்ள,

'காங்கிரஸ் பெயரில், மொபைல் எண்ணிற்கு வந்த அழைப்பில், பா.ஜ., வேட்பாளர் பேசுவது போல, குரல் பதிவு செய்யப்பட்டு பிரசாரம் செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், காங்., புகார் அளித்துள்ளது.துறைமுகம் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு, சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சிவராஜசேகரன் அனுப்பியுள்ள மனு:துறைமுகம் தொகுதியில் உள்ள, என் நண்பர் முருகனின் மொபைல் போனுக்கு, ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.முருகன் மொபைல் போனில் உள்ள 'ட்ரூகாலர் ஆப்' இயங்கியதால், காங்கிரஸ் என்ற பெயரில் அந்த அழைப்பு வந்தது தெரியவந்தது.அதில் பேசிய நபர், 'துறைமுகம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆகிய எனக்கு, தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்' என, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு வாயிலாக, பிரசாரம் செய்து வருகிறார்.உண்மையான பெயரில், பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்காமல், காங்கிரஸ் பெயரில் மொபைல் அழைப்புகளின் வாயிலாக, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டுவது மோசடி செயல். தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில், குறுக்கு வழியில் செயல்படுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது.தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து, அப்பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, புதுச்சேரியில், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் மட்டும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி தேர்தல் பிரசாரம் செய்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக, ஆதார் ஆணையம் விசாரணை நடத்தி, உரிய பதில் அளிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இப்படியொரு குரல் பதிவு பிரசார மோசடி புகாரும்,தேர்தல் கமிஷனில்பதிவாகியுள்ளது

- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X