சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் பறிமுதல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தேனாம்பேட்டை: சரக்கு ஆட்டோவில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தேனாம்பேட்டை, செம்மொழி பூங்கா அருகே, நேற்று காலை, சுப்பிரமணியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.இதில், 5 லட்சம் ரூபாய்

தேனாம்பேட்டை: சரக்கு ஆட்டோவில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தேனாம்பேட்டை, செம்மொழி பூங்கா அருகே, நேற்று காலை, சுப்பிரமணியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.இதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, துணிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுனர், முகமது பாஷித், 36, என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராயபுரத்திலிருந்து, தி.நகருக்கு துணிகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.அதேபோல், அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே, ஆட்டோவில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 2.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X