வங்கிக்கு சொந்தமான ரூ.1.30 கோடி சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கிக்கு சொந்தமான ரூ.1.30 கோடி சிக்கியது

Added : ஏப் 04, 2021
Share
ஆயிரம்விளக்கு: உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட, 1.30 கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே, நேற்று காலை மாநகராட்சி பொறியாளர் ஜெயசந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 1.30 கோடி ரூபாய் உரிய ஆவணம் இன்றி

ஆயிரம்விளக்கு: உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட, 1.30 கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே, நேற்று காலை மாநகராட்சி பொறியாளர் ஜெயசந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 1.30 கோடி ரூபாய் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சேத்துப்பட்டில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணம், பிராட்வேயில் உள்ள யூ.பி.ஐ., வங்கிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X