ஓட்டேரி: ஓட்டேரியில், மர்ம நபர்களால், ரவுடி, ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, ஓட்டேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மதன், 30; ரவுடியான இவர் மீது, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில், ஒரு கொலை வழக்கு உட்பட, டி.பி.சத்திரம், அயனாவரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.இவர், நேற்று இரவு, ஓட்டேரி, பாஷியம் ரெட்டி, 3வது தெருவில் சென்ற போது, அங்கு மறைந்திருந்த ஐந்து மர்ம நபர்கள், அவரை சுற்றிவளைத்தனர்.அவர்கள், மதனை, ஓடஓட விரட்டி, சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார்.புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். தப்பியோடிய மர்ம நபர்களை, ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், ஓட்டேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE