பணப் பட்டுவாடா அ.தி.மு.க., பிரமுகர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணப் பட்டுவாடா அ.தி.மு.க., பிரமுகர் கைது 

Added : ஏப் 04, 2021
Share
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையில், பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, நமச்சிவாய தெருவில் உள்ள அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், பணப் பட்டுவாடா செய்வதாக, நேற்று கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார், அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு, 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. பொதுமக்களிடம்

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையில், பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, நமச்சிவாய தெருவில் உள்ள அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், பணப் பட்டுவாடா செய்வதாக, நேற்று கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார், அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு, 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. பொதுமக்களிடம் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.போலீசார், அ.தி.மு.க., பிரமுகர் முனுசாமி, 45, என்பவரை கைது செய்தனர். ராயபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் பேபியிடம், பணம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X