ஆவடி; தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், கணக்கில் வராத, 11.50 லட்சம் ரூபாய் சிக்கியது.சென்னை, ஆவடி, சி.டி.எச்., சாலையில், நேற்று காலை, 10:30 மணி அளவில், ஆவடி தொகுதி தேர்தல் கண்காணிப்பு அதிகாரி பிரியா தலைமையில், பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆவடியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர் தனசேகரன், 55, சென்ற காரை, அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர். அவரிடம், 11.50 லட்சம் ரூபாய் இருந்தது.விசாரணையில், பெட்ரோல் பங்க்கிற்குரிய பணத்தை, வங்கியில் செலுத்த கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE