பட்டா வழங்குவேன்: ஹசன் மவுலானா உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா வழங்குவேன்: ஹசன் மவுலானா உறுதி

Added : ஏப் 04, 2021
Share
சென்னை: ''நான் வெற்றி பெற்றதும், தொகுதியில் நிலவும் பட்டா பிரச்னைக்கு தீர்வு காண்பேன்,'' என, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா கூறினார்.வேளச்சேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, நேற்று, திருவான்மியூர் அவ்வைநகர், கண்ணப்பாநகர், பி.டி.சி., காலனி, ராஜாஜி நகர், கணேஷ் நகர், பெசன்ட் நகர், சாஸ்திரி நகர்,

சென்னை: ''நான் வெற்றி பெற்றதும், தொகுதியில் நிலவும் பட்டா பிரச்னைக்கு தீர்வு காண்பேன்,'' என, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா கூறினார்.வேளச்சேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, நேற்று, திருவான்மியூர் அவ்வைநகர், கண்ணப்பாநகர், பி.டி.சி., காலனி, ராஜாஜி நகர், கணேஷ் நகர், பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், ஜீவரத்தினம் நகர் போன்ற பகுதியில் பிரசாரம் செய்தார்.வேட்பாளர் ஓட்டு கேட்கும் போது, பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னையை, கோரிக்கையாக வைத்தனர்.பெசன்ட் நகர், அருணாசலம்புரம் பகுதிக்கு சென்ற போது, அங்குள்ள, 50க்கும் மேற்பட்டோர் வேட்பாளரை சூழ்ந்தனர். அவர்கள், 'நாங்கள், 40 ஆண்டுகளாக வசிக்கிறோம்; இன்னும் பட்டா வழங்கவில்லை; சிலருக்கு பட்டா வழங்கி உள்ளனர். நீங்கள் தான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்' என்றனர்.இதற்கு, ஹசன் மவுலானா, 'பட்டா பிரச்னை தொகுதி முழுவதும் உள்ளது. நான் வெற்றி பெற்றதும், சிறப்பு கவனம் எடுத்து, சட்டசபையில் பேசி, பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்' என, அவர்களுக்கு உறுதி அளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X