சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுயேச்சையிடம் லஞ்சம்: காவலர் 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி: பிரசாரம் செய்ய, சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலரை, இணை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்தார்.சென்னை, சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதியில், மாதவரம், மூலச்சத்திரத்தைச் சேர்ந்த, கிருஷ்ணதாசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.அவர், அந்த தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க கோரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், ஏப்., 1ம் தேதி கடிதம்

திருவல்லிக்கேணி: பிரசாரம் செய்ய, சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலரை, இணை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்தார்.சென்னை, சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதியில், மாதவரம், மூலச்சத்திரத்தைச் சேர்ந்த, கிருஷ்ணதாசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.அவர், அந்த தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க கோரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், ஏப்., 1ம் தேதி கடிதம் வழங்கினார்.தலைமை காவலராக பணிபுரியும் குணசேகரன், வேட்பாளர் கிருஷ்ணதாசனிடம், அனுமதி பெற்று தர, தன்னை 'கவனிக்க' வேண்டும் என, கேட்டுள்ளார்.அவர் பேசிய போன் உரையாடலை பதிவு செய்த கிருஷ்ணதாசன், நேற்று முன்தினம், தலைமை காவலர் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக, சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.விசாரித்த இணை கமிஷனர், குணசேகரனை, நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X