பொது செய்தி

தமிழ்நாடு

குற்றச்சாட்டை நிரூபித்தால் விலக தயார் மா.சு.,வுக்கு சைதை துரைசாமி பதிலடி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை; ''நில மோசடி என, என் மீது ஒரு குற்றச்சாட்டை நிரூபித்தாலும், இந்த வினாடியில் இருந்தே அரசியலிலும், தேர்தலிலும் இருந்து விலக தயார்,'' என, சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார்.சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், சைதை துரைசாமி, தி.மு.க., வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வசிக்கும் வீடு குறித்து, சர்ச்சை எழுப்பினார்.இதற்கு

சென்னை; ''நில மோசடி என, என் மீது ஒரு குற்றச்சாட்டை நிரூபித்தாலும், இந்த வினாடியில் இருந்தே அரசியலிலும், தேர்தலிலும் இருந்து விலக தயார்,'' என, சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார்.சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், சைதை துரைசாமி, தி.மு.க., வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வசிக்கும் வீடு குறித்து, சர்ச்சை எழுப்பினார்.இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி மீது நில மோசடி, அபகரிப்பு புகார்களை கூறினார்.இதற்கு விளக்கம் அளித்து, சைதை துரைசாமி நேற்று அளித்த பேட்டி:மா.சுப்பிரமணியன், 'சொத்து, இப்போதும் சிட்கோவிடம் தான் இருக்கிறது; மேற்கூரை தான் கட்டி உள்ளேன்' என, கூறுகிறார். மேற்கூரை கட்ட, யார் அனுமதி வழங்கியது. வீட்டை இடித்து கட்ட, சிட்கோவிடம் அனுமதி வாங்கினாரா? வரைபட அனுமதி பெற்றாரா? கண்ணன் மகள் காஞ்சானா என, சிட்கோவிடம் மனு கொடுத்துள்ளார். இவையெல்லாம், 'விஜிலென்ஸ்' அறிக்கையில் உள்ளது. தொழிலாளர் குடியிருப்பை, வேறு யாரும் வாங்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என, அரசு உத்தரவு இருக்கும் போது, அவர் முறைகேடு செய்துள்ளார். இதற்காக, மனைவி தொழில் நிறுவனத்தில் பணி செய்ததாக, பொய் சான்றும் வாங்கி உள்ளார். சொத்தை அபகரிக்க, போலி ஆவணம் தயாரித்து, பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்.ஸ்டாலின் கூட்டத்தில், அவர் என்னை கடுமையாக தாக்கி பேசியதால், நான் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது.திருத்தணியில், 40 ஏக்கர் இடம் உள்ளது; அதை மகனுக்கு வழங்கி விட்டேன். ஆயிரம்விளக்கு தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் வைத்தியநாதன் சொத்தை நான் அபகரிக்கவில்லை.நில மோசடி என, என் மீது ஒரு குற்றச்சாட்டை நிரூபித்தாலும், இந்த வினாடியில் இருந்தே அரசியலிலும், தேர்தலிலும் இருந்து விலக தயார்.கடந்த, 1984ல் வெற்றி பெற, ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்ததாக, என் மீது எங்கும் குற்றச்சாட்டு இல்லை. என்னை எதிர்த்து எதிலும், அவர் வெற்றி பெற்றதும் இல்லை.நான், எனது சொத்தை விற்று, மனித நேய அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அவர் கூறுவது போல், நான் வருமான வரி ஏய்ப்பு செய்யவில்லை.ஐந்து ஆண்டு மேயராக இருந்த போது, எப்படியெல்லாம் நேர்மையாக செயல்பட்டேன் என, மக்களுக்கு தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X