சென்னையில் தேர்தல் கட்டுப்பாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் தேர்தல் கட்டுப்பாடு

Added : ஏப் 04, 2021
Share
சென்னை; தேர்தல் பிரசாரத்திற்காக, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர், சென்னையை விட்டு வெளியேற, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சட்டசபை தேர்தல், வரும், 6ம் தேதி காலை, 7:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, இன்று மாலை, 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவுகள்

சென்னை; தேர்தல் பிரசாரத்திற்காக, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர், சென்னையை விட்டு வெளியேற, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சட்டசபை தேர்தல், வரும், 6ம் தேதி காலை, 7:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, இன்று மாலை, 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவுகள் முடிவடையும் வரையில், 1951 மக்கள் பிரநிதித்துவ சட்டப்பிரிவு, 126ன் கீழ், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது.விதிமுறைகள் தேர்தல் தொடர்பான பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது திரைப்படம், தொலைகாட்சி, எப்.எம்., ரேடியோ, வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட கூடாது. இதில், குறுஞ்செய்தி, இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் உள்ளடக்கும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு போன்ற பிற கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது. மீறுபவர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட, அத்தொகுதி வாக்காளர்கள் அல்லாதோர், இன்று மாலை, 7:00 மணிக்கு மேல், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் கல்யாண மண்டபம், சமுதாய கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் போன்றவற்றில் வெளி நபர்கள் தங்க அனுமதிக்க கூடாது வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட அனைத்து வாகன அனுமதிகள், இன்று மாலை, 7:00க்கு மேல் காலாவதியாகிவிடும் வாக்காளர்களை ஓட்டுச்சாவடி அழைத்து வர, வேட்பாளர்கள் எவ்வித வாகனங்களையும் பயன்படுத்த கூடாது அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம், ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே, இரண்டு நபர்களுடன் செயல்படலாம். அங்கு தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்க கூடாது  அங்கு எவ்வித உணவு பொட்டலங்களும் பரிமாற கூடாது. முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பிரசார அலுவலகத்தில், குற்ற வழக்குகள் தொடர்புடைய நபர்களை பயன்படுத்த கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X