சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனரை மாற்ற கோரி மறியல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பிராட்வே,: பா.ஜ., பணிமனைக்குள் நுழைந்து, பெண் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி கமிஷனரை மாற்றக்கோரி, மறியல் போராட்டம் நடந்தது.கொத்தவால்சாவடி, ஆதியப்ப தெருவில், பா.ஜ., சார்பில், தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு, வேட்பாளர் இல்லாமல், பெண் தொண்டர்கள், 150 பேர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு, பணம் பட்டுவாடா நடப்பதாக கூறி, தி.மு.க.,வினர்

பிராட்வே,: பா.ஜ., பணிமனைக்குள் நுழைந்து, பெண் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி கமிஷனரை மாற்றக்கோரி, மறியல் போராட்டம் நடந்தது.கொத்தவால்சாவடி, ஆதியப்ப தெருவில், பா.ஜ., சார்பில், தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு, வேட்பாளர் இல்லாமல், பெண் தொண்டர்கள், 150 பேர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு, பணம் பட்டுவாடா நடப்பதாக கூறி, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.தொடர்ந்து, துறைமுகம் உதவி கமிஷனர் கொடிலிங்கம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.அவர், பா.ஜ., பெண் தொண்டர்களை வெளியேறுமாறு கூறினார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதை கண்டித்து, பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், அ.தி.மு.க., மாவட்ட செயலர் பாலகங்கா மற்றும் தொண்டர்கள், நேற்று பணிமனை முன் மறியல் போராட்டம் நடத்தினர். உதவி கமிஷனரை மாற்ற கோரி, கோஷம் எழுப்பினர்.துணை கமிஷனர் பேச்சு நடத்தி, மறியலை கலைத்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X