பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தலைவர்கள் மீது சேகர்பாபு குற்றச்சாட்டு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: ''தேர்தலுக்கு மட்டுமே, பா.ஜ., தலைவர்கள் தமிழகம் வருவர்,'' என, தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபு கூறினார்.துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவிற்கு ஆதரவாக, வடமாநிலத்தவர்கள் ஹிந்தியில் பேசி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.கொண்டித்தோப்பு, திருப்பள்ளி தெரு, தாண்டவராயன் தெரு, அம்மன் கோவில் தெரு, முல்லா சாகிப் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று வீதி வீதியாக நடந்து

சென்னை: ''தேர்தலுக்கு மட்டுமே, பா.ஜ., தலைவர்கள் தமிழகம் வருவர்,'' என, தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபு கூறினார்.துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவிற்கு ஆதரவாக, வடமாநிலத்தவர்கள் ஹிந்தியில் பேசி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.கொண்டித்தோப்பு, திருப்பள்ளி தெரு, தாண்டவராயன் தெரு, அம்மன் கோவில் தெரு, முல்லா சாகிப் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று வீதி வீதியாக நடந்து சென்று, சேகர்பாபு ஓட்டு சேகரித்தார்.அப்போது, அவர் கூறிய தாவது:தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., தேசிய தலைவர், தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். தமிழகத்தில், 2016ல், பா.ஜ., தனித்து போட்டியிட்ட போது, இவர்கள் பிரசாரத்திற்கு வந்தனர். மீண்டும், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரசாரத்திற்கு வந்தனர்.தேர்தலுக்கு மட்டுமே வருவர். பின், இவர்கள் மக்களின் குறைகளை கேட்கவும், பிரச்னைகளை தீர்க்கவும் வருவது இல்லை. தேர்தலுக்கு மட்டும் வருபவர்களை, மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் துறைமுகம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X