வணிக சாலை, உணவு வளாகம் வினோஜ் பி.செல்வம் வாக்குறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிக சாலை, உணவு வளாகம் வினோஜ் பி.செல்வம் வாக்குறுதி

Added : ஏப் 04, 2021
Share
சென்னை; துறைமுகம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.சென்னை, துறைமுகம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், நேற்று, கொண்டித்தோப்பு, இப்ராகிம் தெரு, ஜிந்தா தெரு, சுந்தரம் தெரு, அம்மன் கோவில் தெரு, நம்மாழ்வார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது, அவர்

சென்னை; துறைமுகம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.சென்னை, துறைமுகம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், நேற்று, கொண்டித்தோப்பு, இப்ராகிம் தெரு, ஜிந்தா தெரு, சுந்தரம் தெரு, அம்மன் கோவில் தெரு, நம்மாழ்வார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நான் வெற்றி பெற்றால், 'முத்ரா' கடன் திட்டம், 'உஜ்வாலா' திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், விவசாய பயிர் கடன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும், தொகுதி மக்களுக்கு பெற்றுத் தருவேன்.180 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சென்னையின் தொழில் நகரமாக விளங்கும் தங்கசாலையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில், உலக தரத்திலான வணிக சாலை அமைக்கப்படும்.பிராட்வே பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும். மத்திய அரசின் உதவியுடன், துறைமுகம் தொகுதியில் 'மெகா வர்த்தக வளாகம்' அமைக்கப்படும். சாலையோர உணவு கடைகளை ஒருங்கிணைத்து, 'உணவு வளாகம்' துவங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X