அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதிக்கு முதல்வர் பதவியா?

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
'இங்கே போட்டியிடும் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கும் நான், எனக்காகவும், ஒரு ஓட்டு கேட்கிறேன். என்ன புரியலையா? நீங்க ஓட்டு போட்டு ஒருத்தரை தேர்வு செஞ்சுடுவீங்க. அவர மாதிரி தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு, என்னை முதல்வரா தேர்வு செய்யணும். அந்த வகையில, நீங்க போடறது ஒரு ஓட்டல்ல; இரண்டு ஓட்டு' - இப்படித்தான், போகுமிடமெல்லாம்

'இங்கே போட்டியிடும் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கும் நான், எனக்காகவும், ஒரு ஓட்டு கேட்கிறேன். என்ன புரியலையா? நீங்க ஓட்டு போட்டு ஒருத்தரை தேர்வு செஞ்சுடுவீங்க. அவர மாதிரி தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு, என்னை முதல்வரா தேர்வு செய்யணும். அந்த வகையில, நீங்க போடறது ஒரு ஓட்டல்ல; இரண்டு ஓட்டு' - இப்படித்தான், போகுமிடமெல்லாம் பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்.latest tamil newsஆனால், தி.மு.க., பெரும்பான்மை பெற்றாலும், ஸ்டாலின், குறைந்த காலமே முதல்வராக இருப்பார்; சீக்கிரமே அந்த நாற்காலியில் அமரப் போகிறவர் உதயநிதி தான் என்று ஒரு தகவல் தீயாய் சுற்றுகிறது அந்தக் கட்சிக்குள்ளேயே. அதற்காகத்தான், அவரை வலிந்து சென்னை,சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். எப்படியாவது அவரை ஜெயிக்க வைப்பதற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து இளைஞரணி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர்.


latest tamil news


'ஒன்றுமே தெரியாத உதயநிதி முதல்வராக தமிழக மக்கள் ஓட்டு போடுவார்களா?' என, பிரதமர்மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேட்பதன் பின்னணி இதுதான் என, விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். 'நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் போகிற போக்கில் இப்படியொரு விஷயத்தை பேச மாட்டார்கள். உதயநிதியை முதல்வராக்க, தி.மு.க.,வில், குறிப்பாக, ஸ்டாலின் குடும்பத்தில் நடக்கும் ரகசிய ஆலோசனைகள் குறித்து மத்திய அரசுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் பேசியுள்ளனர்' என, அ.தி.மு.க., -- பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாவது: தி.மு.க., என்றாலே, குடும்ப அரசியல் என்பது தெரிந்த விஷயம். கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். என்றாலும் அவர்தான் நிஜ முதல்வராக செயல்பட்டார். கருணாநிதிக்கு தெரியாமலே பல விஷயங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இப்போது ஒருவேளை, தி.மு.க., வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் நீண்ட காலத்துக்கு முதல்வராக இருக்க மாட்டார். அவருடைய உடல் நிலை குறித்து குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அவர், முதல்வராக பதவி ஏற்ற சில வாரங்களில் அவரை லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க விரும்புகின்றனர்.
அந்த சமயத்தில், உதயநிதிக்கு முடி சூட்டி விடலாம் என்பது திட்டம். இது வெளியே தெரிந்தால், தி.மு.க., தொண்டர்களே அக்கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதால், ரகசியமாகவைத்துள்ளனர். அதிகார பதவிக்கான அதிர்ஷ்டம் ஸ்டாலினுக்கு இல்லை என்பதை பல ஜோதிடர்கள் உறுதியாக சொல்லி விட்டனர். ஆனால், உதயநிதி ஜாதகத்தில் அதிகார யோகம் இருப்பதாக ஜோதிடர்கள், துர்காவிடம் சொல்லியுள்ளனர்.

அதை கேட்ட பிறகுதான், அவசரமாக மகனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க துர்கா பாடுபடுகிறார். துணை முதல்வராக இருப்பவர் முதல்வர் பதவியை ஏற்பது குறித்து சட்ட ஆலோசனை கேட்ட தகவல்களும், மத்திய அரசுக்கு உளவுத்துறை வழியாக தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கூறியதாவது: தப்பித்தவறி, தி.மு.க., வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் முதல்வர் ஆகப் போவதில்லை. அவர் குடும்பத்திலேயே அதற்கு ஆதரவு மிகவும் குறைவுதான். அழகிரி மட்டும் தான் ஸ்டாலினுக்கு எதிரி என, பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு கருணாநிதியின் பெரிய குடும்பத்தில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஆழமான நீரோட்டங்கள் தெரியாது.ஆனால், மத்திய அரசு உன்னிப்பாக அதை கவனித்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் பிரதமரே உதயநிதி பெயரை குறிப்பிட்டு தமிழக மக்களுக்கு முன் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். தி.மு.க.,வில் உள்ள, உண்மையான தொண்டர்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டால் அது நாட்டுக்கும் நல்லது, அவர்களின் கட்சிக்கும் நல்லது. இவ்வாறு வைகைச் செல்வன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202119:37:10 IST Report Abuse
Matt P பேசியதற்கு விளக்கம் கேட்டால் எழுதி வைச்சு படிப்பவனுக்கெல்லாம் தமிழகத்துக்கு முதலமைச்சர் ஆகும் பதவியை தரலாமா?...
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202119:30:54 IST Report Abuse
Matt P உதயநிதிக்கு முடி சூட்டி விடலாம் என்பது திட்டம். இது வெளியே தெரிந்தால், தி.மு.க., தொண்டர்களே அக்கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதால்,,,,,,,,உதயநிதி முதல்வர் ஆனால் மட்டும் அந்த தொண்டர்கள் ஏற்றுகொள்வார்களா?...மொத்தத்தில் ...வந்தாலும் வராட்டியும் திமுகவுக்கு அழிவுக்கு காலம் நெருங்கி விட்டது போலிருக்கு. ஸ்டாலின் தான் வாராருன்னாங்க. கூடிய சீக்கிரம் போறாரு போறாரு லண்டனுக்கு தான் போறாருன்னு பாடுவாங்க போலிருக்கு.....வாராய் நீ வாராய் ...நீ போகும் , இடம் வெகு தூரம் இல்லை. கட்சியை சொன்னேன்.
Rate this:
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
08-ஏப்-202110:15:40 IST Report Abuse
Vijaya Raghav உதயநிதி முதல்வர், ஸ்ரீ ரெட்டி துணை முதல்வர், இரண்டாவது துணை முதல்வர் நயன் தாரா. பிறகு தலைமை செயலகத்தில் திரைப்பட தயாரிப்பு . மக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X