தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

அங்கு ஆயிரம் இங்கு ஐநூறு தானா...

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
'பக்கத்து தொகுதியில் உதயமானவர், ஆயிரம் கொடுக்குறாரு, நீங்க ஐநுாறு தான் கொடுக்கறீங்க'ன்னு தெர்மாகோல் அமைச்சரை வாக்காளர்கள் கேட்க, 'அவரு, வருவாய் துறைக்காரருங்க'ன்னு பதில் சொன்னாராம்.-பால் போல் பொங்கும் 'மில்க்' தலைவர்சூரிய கட்சியின், 'மில்க்' தலைவர் தான் எப்போதும், பாலிவுட் ஊரின் பவார் தலைவர் வாயிலாக, கட்சிக்கு நிதி வசூலிப்பாராம். இந்த முறை, தலைவரின் மருமகப்
 அங்கு ஆயிரம் இங்கு ஐநூறு தானா...

'பக்கத்து தொகுதியில் உதயமானவர், ஆயிரம் கொடுக்குறாரு, நீங்க ஐநுாறு தான் கொடுக்கறீங்க'ன்னு தெர்மாகோல் அமைச்சரை வாக்காளர்கள் கேட்க, 'அவரு, வருவாய் துறைக்காரருங்க'ன்னு பதில் சொன்னாராம்.-பால் போல் பொங்கும் 'மில்க்' தலைவர்
சூரிய கட்சியின், 'மில்க்' தலைவர் தான் எப்போதும், பாலிவுட் ஊரின் பவார் தலைவர் வாயிலாக, கட்சிக்கு நிதி வசூலிப்பாராம். இந்த முறை, தலைவரின் மருமகப் பிள்ளையே, அதே தலைவரை சந்தித்து, நிதி வசூலித்து வந்துவிட, பால் போல பொங்குகிறாராம், 'மில்க்...'
-தலைவர் பேச்சு சூரிய கட்சி எரிச்சல்
'தாமரை மலர்ந்துடக் கூடாதுங்கறதுக்காகவே, ஆறு சீட்டுக்கு, 'செட்டில்' ஆனேன்; ஆனால், என்னுடைய இலக்கு, பன்னிரெண்டு' என, போற இடங்களில் எல்லாம் வளவனான தலித் தலைவர் பேச, சூரிய கட்சியினர் எரிச்சல் அடைக்கின்றனராம்.
-ஆதாரம் கிடைத்தும் பயன்படுத்தாதது ஏன்?
தாமரை கட்சிக்குள் நடக்கும் அத்தனை கூத்துக்களும், சூரிய கட்சி தலைவர்கள் கைக்கு ஆதாரங்களோடு போயிடுச்சாம். அதை, தேர்தலுக்கு பயன்படுத்த முடிவெடுத்த சூரிய கட்சி, ஏனோ கிடப்பில் போட்டுடுச்சாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X