அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வாத்தியார்' கிட்ட படிச்சவங்க தானே!

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
'தலைவரு உள்ளே, 'மேக்கப்' போட்டுட்டு இருக்காரு; இப்ப வந்துடுவாரு' என, தொண்டர் ஒருவர் சொல்ல, 'யாருப்பா வந்திருக்கா...' மொபைல் போனில் எதிர்முனையில் இன்னொருவர் கேட்க, வந்திருப்பவர் பெயரை சொல்லக்கூட தயங்கிய அந்த தொண்டர், 'அட... நம்ம வாத்தியார் தான்' என, சொன்ன போது, சுற்றியிருந்தவர்கள் கண்ணில், 'ஆயிரம் வாட்ஸ்' வெளிச்சம்.அவிநாசியில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால்,
 'வாத்தியார்' கிட்ட படிச்சவங்க தானே!

'தலைவரு உள்ளே, 'மேக்கப்' போட்டுட்டு இருக்காரு; இப்ப வந்துடுவாரு' என, தொண்டர் ஒருவர் சொல்ல, 'யாருப்பா வந்திருக்கா...' மொபைல் போனில் எதிர்முனையில் இன்னொருவர் கேட்க, வந்திருப்பவர் பெயரை சொல்லக்கூட தயங்கிய அந்த தொண்டர், 'அட... நம்ம வாத்தியார் தான்' என, சொன்ன போது, சுற்றியிருந்தவர்கள் கண்ணில், 'ஆயிரம் வாட்ஸ்' வெளிச்சம்.

அவிநாசியில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால், பிரசாரத்துக்காக, கைகாட்டிப்புதுார் பிரிவில் காத்திருந்த கூட்டத்தில் தான் இந்த பேச்சு. வெள்ளை வேட்டி, ஜிப்பா அணிந்த முதியவர், நெற்றியில், 'ரோஸ் பவுடரை' பூசிக்கொண்டு, எம்.ஜி.ஆராக, அவதாரம் எடுக்க அரிதாரம் பூசி கொண்டிருந்தார். ''பேரு ரங்கசாமிங்க. ஊரு பல்லடம். எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகன்; விசுவாசி. 2007ல் இருந்து, தேர்தல் நேரங்களில், இதுமாதிரி எம்.ஜி.ஆர்., வேஷம் போட்டு, மக்களை குஷிப்படுத்திட்டு இருக்கேன்.

''மனசுக்கு திருப்தியா இருக்கு. மத்தவங்க, 10 ஆயிரம் ரூபா வரை வாங்கிட்டு தான் இந்த வேஷம் கட்டுவாங்க. நான் அப்படியில்லை. ரொம்ப வேண்டப்பட்டவங்க கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்,'' என்றார். 'இப்பெல்லாம் நிறைய கட்சிகள், தலைவர்கள் வந்துட்டாங்க. உங்க அனுபவம் எப்படி?' என, கேட்டபோது, 'எத்தனை கட்சிகள் வந்தாலும், அத்தனை கட்சிகளின் தலைவர்களும் எம்.ஜி.,ஆரை ஏதாவது ஒரு வழியில் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதைவிட கொடுப்பினை என்னங்க இருக்கு?' என்றார்.

'மேக் -கப் போட உதவியாளர் யாரும் இல்லையா? தனியா கஷ்டப்படறீங்களே?' என, கேட்ட போது, 'நானே காசு வாங்காம வந்துட்டு போறேன். இதுல, 'மேக்கப் மேன்' வச்சுகிட்டா அவருக்கு, 500 ரூபா கொடுக்கணும். அதனால நானே போட்டுக்கிறேன்' என, பதிலளித்தார்.'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்.,... இவங்க செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீங்க?' என கேட்ட போது, 'எம்.ஜி.ஆர்., தானங்க எல்லாமே. 'அம்மாவும் அவர பின்பற்றினாங்க. இப்ப வந்துருக்றவங்களும் வாத்தியார் கிட்ட பாடம் படிச்சவங்க தானே; போகப்போக எல்லாம் சரியாகிவிடும்' என்றார் பட்டென. 'எம்.ஜி.ஆர்., ஒரு மகான்...'னு அமித் ஷா சொன்னது தப்பே இல்லீங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X