மணப்பாறை, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து, வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சியில் பிரசாரம் செய்தார், கேப்டன் மகன் விஜய பிரபாகரன்.
'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என சொல்லி, மத்திய, -மாநில அரசுகள் பொய் பிரசாரம் செய்கின்றன. உதயநிதி அங்கிருந்து ஒரு செங்கல்லை எடுத்து வந்து, 'இது தான் எய்ம்ஸ் மருத்துவமனை' என, மக்களுக்கு புரியும் வகையில் சொல்கிறார். ரொம்ப நல்ல விஷயம். 'அதே மாதிரி, கச்சத்தீவில் இருந்து, ஒரு பிடி மண்ணை எடுத்து வந்து காட்ட முடியுமா? இவருடைய தாத்தா கருணாநிதி தானே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்? அதாவது கருணாநிதியும், அவர் குடும்பமும் ஊரை ஏமாற்றினால், அது மோசடி ஆகாது; அடுத்தவர் செய்தால், அது மோசடி என, ரகளை செய்வார்கள்' என, ஒரு பிடி பிடித்தவர், குடும்ப ரகசியம் ஒன்றையும் மேடையில் உடைத்தார்.
'கேப்டனுக்கு முஸ்லிம்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் தம்பிக்கு, 'சவுகத் அலி' என, பெயர் வைத்தார். பாஸ்போர்ட் போன்ற சில பிரச்னைகளுக்காக, சண்முக பாண்டியன் என பெயரை மாற்றி வைத்தோம். ஆனால், வீட்டில் அவனை, 'சவுகத்' என்று தான் அழைப்பேன்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE