அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வெடியை வீணாக்கி விட்டீங்களே அப்பு...'

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் நகராட்சி ராமநாதபுரம் தொகுதியாகவும், அதனை ஒட்டிய பாரதிநகர், பட்டணம்காத்தான் பகுதிகள் திருவாடானை தொகுதியிலும் வருகின்றன. பட்டணம்காத்தான் தாண்டிசென்றால் ராமேஸ்வரம் வரை மீண்டும் ராமநாதபுரம் தொகுதி. அதே போல், ராமநாதபுரத்தைஒட்டிய அச்சுந்தன்வயல் பகுதி திருவாடானை தொகுதியில் வருகிறது. இப்படி ஒரு குழப்பம் தொகுதி, ஊர்களில் இருக்கிறது. இந்த நிலையில், வேட்பாளர்

ராமநாதபுரம் நகராட்சி ராமநாதபுரம் தொகுதியாகவும், அதனை ஒட்டிய பாரதிநகர், பட்டணம்காத்தான் பகுதிகள் திருவாடானை தொகுதியிலும் வருகின்றன. பட்டணம்காத்தான் தாண்டிசென்றால் ராமேஸ்வரம் வரை மீண்டும் ராமநாதபுரம் தொகுதி. அதே போல், ராமநாதபுரத்தைஒட்டிய அச்சுந்தன்வயல் பகுதி திருவாடானை தொகுதியில் வருகிறது. இப்படி ஒரு குழப்பம் தொகுதி, ஊர்களில் இருக்கிறது. இந்த நிலையில், வேட்பாளர் வரவேற்பில் ஏற்பட்ட குழப்பம் இங்கு சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.அச்சுந்தன்வயல் கிராமத்திற்கு திருவாடானை, காங்., வேட்பாளர் கருமாணிக்கம் வர இருந்தார். அவரை வரவேற்க, எல்லையில் தாரை தப்பட்டை, வெடிகளுடன் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அதே நேரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ஆணிமுத்துவும் அங்கு சென்றார். இதனால், காங்., வேட்பாளர் கருமாணிக்கம் தான் வருகிறார் என்று தொண்டர்கள் சரவெடியை வெடித்து துாள் கிளப்பினர். அருகில் வந்த போது தான் அது, அ.தி.மு.க., வேட்பாளர் என தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் ஓரமாக போய் அமர்ந்து விட்டனர். அங்கிருந்த முதியவர்ஒருவர், 'வெடிய போட்டு வீணாக்கீட்டீங்களே அப்பு...' என்று கேட்டதும் சிரிப்பொலி எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X