அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும், கோவில்பட்டி தொகுதியில் நவரச நாயகன் கார்த்திக் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர் அ.தி.மு.க., நிர்வாகிகள், மதுரையில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு அழைத்து சென்றனர். கயத்தாறு, 'பாய்ன்ட்டில்' பிரசாரம் செய்வதற்காக காரில் இருந்து கார்த்திக் இறங்கினார்.
வரவேற்க, அ.தி.மு.க., - ம.உ.கா.க., தொண்டர்கள் ஒருவர் கூட அங்கில்லை. 'டென்ஷனான' கார்த்திக், 'நான் யார் தெரியுமா? ம்ம்... என்னை, இந்த முச்சந்திக்கு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்திட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டேன்' என, கோபம் கொப்பளிக்க, காரில் ஏறி விருட்டென பறந்தார்.உடன் வந்த நிர்வாகிகள் நடுரோட்டில் நின்று கொண்டு, கையை பிசைந்து கொண்டு நின்றது பரிதாப காட்சி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE