சாபத்திலிருந்து தப்புவது எப்படி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாபத்திலிருந்து தப்புவது எப்படி?

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, 11 இடங்களில் போட்டியிடுகிறது. சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், கே.எம்.சரீப், 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.கோடம்பாக்கம், புலியூர் பள்ளியில் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு, இமாம் ஜூம்மா பிரசங்கத்தில், 'தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், இறைவனின் சாபம், உங்களுக்குள்
சாபத்திலிருந்து தப்புவது எப்படி?

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, 11 இடங்களில் போட்டியிடுகிறது. சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், கே.எம்.சரீப், 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கோடம்பாக்கம், புலியூர் பள்ளியில் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு, இமாம் ஜூம்மா பிரசங்கத்தில், 'தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், இறைவனின் சாபம், உங்களுக்குள் இறங்கிவிடும்' என, எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக, சரீப் கூறியதாவது:மசூதிகளில், இதுபோல், தி.மு.க.,வுக்காக தொழுகையின் போதே பிரசாரம் செய்கின்றனர். இதற்கு முன், இதுபோல் நடந்ததில்லை. இந்த முறை சாபமெல்லாம் கொடுப்பது புதிதாக உள்ளது.

போய் கேட்கலாம் என நினைத்தேன். பிரச்னை ஏற்படும் என்பதால், விட்டு விட்டேன். நானும் முஸ்லிம் தான். தி.மு.க.,வுக்கு எதிராக வேறு நிற்கிறேன். இந்த சாபத்திலிருந்து, நான் எப்படி தப்பிப்பது? உலமா ஏதாவது தாயத்து மந்திரித்து வைத்துள்ளதா? என சரீப் கேட்கிறார்.-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X