சென்னை, மாதவரம், ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் போட்டியிடும்,அ.தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., பிரசாரம்செய்தார்.

மாதவரம் ரவுண்டானா அருகே, அவரை வரவேற்க, மாதவரம் வேட்பாளர் மூர்த்தி, ஆவடிவேட்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் காத்திருந்தனர். அவர்களுடன், மாதவரம்குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் நீலகண்ணனும் காத்திருந்தார். முதல்வரை வரவேற்ற மூர்த்தி, கூட்டமைப்பின் தலைவர், முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுதந்தார். முதல்வரை சந்தித்த நீலக்கண்ணன், மாதவரம் ரெட்டேரியை, சுற்றுலா தலமாகமேம்படுத்துவது உள்ளிட்ட, தொகுதியின் முக்கிய தேவைகள் குறித்த மனுவை அளித்தார்.கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, முதல்வரும் உறுதி அளித்தார்.

முதல்வரை சந்தித்த மகிழ்ச்சியில், கூட்டமைப்பினர், தங்களது முழு ஆதரவும், அ.தி.மு.க., வுக்கே என, முதல்வரிடம் தெரிவித்தனர். கூட்டமைப்பை சேர்ந்த, 40 சங்கங்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான, ஓட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் மூர்த்தி முகத்தில் பூரிப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE