போலீஸ் டைரி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
விபத்துகளில் மூவர் பலிநகரி: சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, எஸ்.சி.,காலனயைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 28. இவர், இரு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறினர்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் கொத்தகாலனி அருகே, கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி, சந்திரசேகர் இறந்தார்.அதே போல், வரதய்யபாளையம் அடுத்த, பாண்டூர்

விபத்துகளில் மூவர் பலிநகரி: சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, எஸ்.சி.,காலனயைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 28. இவர், இரு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறினர்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் கொத்தகாலனி அருகே, கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி, சந்திரசேகர் இறந்தார்.அதே போல், வரதய்யபாளையம் அடுத்த, பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு மகன் துளசி, 12. இவர், அதே பகுதியில் அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் துளசி, நண்பர்களுடன் நீச்சல் அடிப்பதற்கு, அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி துளசி இறந்தார்.சித்துார் அடுத்த, பி.கொத்தகோட்ட அடுத்த, பட்டவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் நரசிம்மன், 17. இவர், மதனப்பள்ளியில், தனியார் ஐ.டி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் நரசிம்மன், நண்பர் சரண் என்பவருடன், அதே பகுதியில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் மூழ்கி நரசிம்மன் இறந்தார்.கொத்தகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வெள்ளி பொருட்கள் திருட்டுதிருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், தாளமுத்து நடராஜன் தெருவைச் சேர்ந்தவர், சீனிவாசன், 28. இவர், கடந்த, 28ம் தேதி, கால் சிகிச்சைக்காக, சென்னை, வடபழநி தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின், நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.இதற்கிடையில், மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த ௩௫ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசில், சீனிவாசன் அளித்த புகாரையடுத்து, போலீசார், வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X