சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: நிலத்தை எழுதி தர சொல்லி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டார்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா, 42. இவர் மீது, பல காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், படப்பை அருகே, வஞ்சுவாஞ்சேரி பகுதியில் பூங்கோதை மற்றும் வைரமணி

ஸ்ரீபெரும்புதுார்: நிலத்தை எழுதி தர சொல்லி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டார்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா, 42. இவர் மீது, பல காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், படப்பை அருகே, வஞ்சுவாஞ்சேரி பகுதியில் பூங்கோதை மற்றும் வைரமணி ஆகிய இருவருக்கிடையே நிலப்பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலம் குறித்த வழக்கு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.ரவுடி குணா, 'இந்நிலத்தை, வைரமணி பெயரில் எழுதி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உயிரோடு இருக்கமாட்டீங்க' என, பூங்கோதையின் கணவர் மூவரசனை மிரட்டியுள்ளார்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம், பூங்கோதை புகார் அளித்தார். இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், குணாவை, மணிமங்கலம் போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X