பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை அவசியம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிக்கான மண்டல தேர்தல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது. காவல் பார்வையாளர்விரேந்திர மிஸ்ரா,போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலெக்டர் கூறியதாவது:தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார்,

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிக்கான மண்டல தேர்தல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது. காவல் பார்வையாளர்விரேந்திர மிஸ்ரா,போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலெக்டர் கூறியதாவது:தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், கொரோனா முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி, சானிடைசர், முக கவசம், கையுறை ஆகிவற்றை பயன்படுத்த வேண்டும். தேர்தல் பணியின் போது, அரசால் வழங்கப்பட்ட கை துப்பாக்கியை, போலீசார் வைத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஓருமுறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, தேர்தல் கட்டுப்பாடு அறைக்கு தெரிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, மின்னணு இயந்திரங்களை ஒப்படைத்து, ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, இயந்திரங்களை அனுப்ப வேண்டும்.ஓட்டுச்சாவடி மையங்கள் அருகில், கூட்டம் கூடுவதை, தவிர்க்க வேண்டும். தேர்தல் பணியில், மண்டல அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X