காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏப்., 1ம் தேதி வரை, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த, 4.67 கோடி ரூபாயில், தகுந்த ஆவணம் சமர்ப்பித்தோருக்கு, 1.11 கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார் ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த, 1ம் தேதி வரை, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டதில், தகுந்த ஆவணமின்றி எடுத்து வந்த, 4.67 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதில், தகுந்த ஆவணங்களை சமர்பித்தோருக்கு, 1.11 கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மீத தொகை, காஞ்சிபுரம் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE