பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலையொட்டி மானாம்பதியில் மாதிரி ஓட்டுப்பதிவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: சட்டசபை தேர்தலையொட்டி, மானாம்பதி ஊராட்சியில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், கிராமவாசிகள் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் அனைவரும், தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்போம் என, உறுதிமொழி ஏற்றனர்.தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

உத்திரமேரூர்: சட்டசபை தேர்தலையொட்டி, மானாம்பதி ஊராட்சியில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், கிராமவாசிகள் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் அனைவரும், தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்போம் என, உறுதிமொழி ஏற்றனர்.தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்தார்.இதில், 100 நாள் வேலை எனப்படும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு, தேர்தல் குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், 100 நாள் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவருக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 100 சதவீதம் ஓட்டளிப்போம் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X