பொது செய்தி

இந்தியா

கின்னஸ் சாதனை படைக்க புறப்பட்ட ராணுவ வீரர்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஜம்மு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேலு, 'கின்னஸ்' சாதனை படைக்க, காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையிலான, 'மாரத்தான்' ஓட்டத்தை துவக்கியுள்ளார்.தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரும், ராணுவ வீரருமான நாயக் வேலு, உதம்பூர் ராணுவ மருத்துவமனையில், உதவி செவிலியராக உள்ளார்.இவர், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான, 4,300 கி.மீ., துாரத்தை, 50 நாட்களில் ஓடி

ஜம்மு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேலு, 'கின்னஸ்' சாதனை படைக்க, காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையிலான, 'மாரத்தான்' ஓட்டத்தை துவக்கியுள்ளார்.தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரும், ராணுவ வீரருமான நாயக் வேலு, உதம்பூர் ராணுவ மருத்துவமனையில், உதவி செவிலியராக உள்ளார்.



latest tamil news



இவர், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான, 4,300 கி.மீ., துாரத்தை, 50 நாட்களில் ஓடி முடித்து, கின்னஸ் சாதனை படைக்க உள்ளார். இதையொட்டி, மார்ச், 31ம் தேதி, ஸ்ரீநகரில் இருந்து அவர் புறப்பட்டார். இது குறித்து, உதம்பூர் ராணுவ செய்தி தொடர்பாளர் அபினவ் நவ்நீத் கூறியதாவது:நாயக் வேலு, மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் ஓடுவார். அவர், பல மாநிலங்கள், நகரங்கள் வழியே, ஒரு நாளைக்கு சராசரியாக, 70 - 100 கி.மீ., ஓடி, 50 நாட்களில், கன்னியாகுமரியை அடைவார். இடையில், 21ம் தேதி, தன், 30வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.


latest tamil news



அவர், 2012ல், ராணுவத்தின் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதன் பின், நீண்ட துாரம் ஓடும், 'மாரத்தான்' போட்டியில் கவனம் செலுத்தி, பல பதக்கங்களை வென்று, ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த, 2016 முதல், இந்திய தடகள கூட்டமைப்பில், இந்திய குழுவின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202118:04:06 IST Report Abuse
ஸாயிப்ரியா சாதிக்க வாழ்த்துக்கள். All the best Sir
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-ஏப்-202117:47:34 IST Report Abuse
THINAKAREN KARAMANI தமிழக ராணுவ வீரர் வேலு, 4,300 கி.மீ. 'மாரத்தான்' ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து 'கின்னஸ்' சாதனை படைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துதிப் பாராட்டுகின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
04-ஏப்-202117:37:57 IST Report Abuse
ஆப்பு சாதனை செஞ்சுட்டு சொல்லுங்கப்பா... பி.ஜே.பி மதுரையில் எய்ம்ஸ் கட்டுன மாதிரி சொல்லுறீங்களே...
Rate this:
vijay - coimbatore,இந்தியா
07-ஏப்-202109:21:17 IST Report Abuse
vijay//சாதனை செஞ்சுட்டு சொல்லுங்கப்பா// முதல்வர் ஆகாமலேயே, கிராம சபை கூட்டங்கள், தனியாக மினி சட்டசபை கூட்டம், நமக்கு நாமே, அப்புறம், பல நாட்கள் முன்பே நான் முதல்வரானால் முதல் கையெழுத்து இதுல போடுவேன், அதுல போடுவேன் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கும் சொடலையின் சிஷ்யர்கள் மண்டைக்குள் இருப்பதை வீட்டில் கழற்றி வைச்சுட்டு பொதுஇடங்களில் தங்களுக்கு மூளை இருப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X