அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடைசி நேரத்தில் மேலிடம் நெருக்கடி ; மன உளைச்சலில் தி.மு.க., வேட்பாளர்கள்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை

கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.latest tamil news


கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர் தி.மு.க., தலைவர்கள். கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும் மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார். இதற்கெல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என, கடைசியாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தி.மு.க.,வுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன. அ.தி.மு.க., தரப்பு கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, பெரும்பாலான ஊர்களில் பட்டுவாடாவை முடித்து விட்டதால் அக்கட்சியினரும், மேலிடத்தில் இருப்பவர்களும் தெம்பாக இருப்பதாகவும் தி.மு.க., தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தி.மு.க., தரப்பிலும் வாக்காளர்களை கவனித்தால் மட்டுமே , இழுபறியாக இருக்கும் பல தொகுதிகளில் ஒன்றிரண்டாவது பிடிக்க முடியும் என கள தகவல்கள் சொல்வதால், மேலிடத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் நொந்து போயிருப்பவர்கள் வசதி குறைவான வேட்பாளர்கள். திருத்தணி சந்திரன் நகர செயலராகவும் நகர்மன்ற தலைவராகவும் இருந்து நிறைய சம்பாதித்தவர் தான். ஆனால், கட்சிக்காக நிறைய செலவழித்து விட்டதால், தற்போது கையில் பணமில்லை. அதை சொன்னால் தலைமை ஏற்க மறுக்கிறது. ஐந்து கோடி செலவழிப்பேன் என்று சொல்லிதானே சீட் வாங்கினீர்கள் என கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். திருநெல்வேலி ஏ.எல்.எஸ். லட்சுமணன். இவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர். அப்பாவும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஆனால் கை சுத்தம்; அதனால் வாய் நீளம். நேர்காணலிலேயே, என்னிடம் சல்லி பைசா கிடையாது. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன்; நாந்தான் திரட்ட வேண்டும் என்றால் எனக்கு சீட்டே வேண்டாம். யாரை நீங்கள் வேட்பாளராக நிறுத்தினாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்றவர். அதன் பிறகும் அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டு, இன்று வரை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை மேலிடம் . கடன் வாங்கி செலவு செய்யுங்கள்; தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என அறிவாலயத்தில் இருந்து போன் போட்டு சொன்னால், தோற்று விட்டால், கடனை எப்படி அடைப்பேன்? என கேட்கிறார் லட்சுமணன். அதே நிலைதான், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வஹாபுக்கும். நிறைய செலவழிக்க முடியும் என்று நேர்காணலில் சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு முன்பே கட்சிக்காக நிறைய கடன் வாங்கி செலவழித்து விட்டதால், வேட்பாளர் ஆன பின், அவர் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கவில்லை. மேலிட நெருக்கடி அதிகமாவதால், எதிரில் வரும் எல்லோரிடமும் கடனுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறார். இந்த மூவரைப் போலவே மதுரவாயலில் காரம்பாக்கம் கணபதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சங்கராபுரம் உதயசூரியன், நன்னிலம் ஜோதிராமன், கடலூர் அய்யப்பன், திருவிக நகர் தாயகம் கவி, கே.வி.குப்பம் சீதாராமன், குடியாத்தம் அமலு, ஆத்தூர் சின்னதுரை, தாராபுரம் கயல்விழி, வேதாரண்யம் வேதரத்தினம், திருவிடைமருதூர் கோவி செழியன், சங்கரன் கோவில் ராஜா என பணப் பிரச்னையில் சிக்கி தடுமாறும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது தி.மு.க., நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என பரவலாக பேசப்பட்டதால், அக்கூட்டணியின் வேட்பாளர்கள் உற்சாகமாக இருந்தனர். இப்போது நிலவரம் கலவரமாகி விட்டது என தெரிந்ததும், கடன் தருவதாக உறுதி அளித்தவர்கள்கூட போன் போட்டால் எடுப்பது இல்லை. இதனால், திமுக வேட்பாளர்கள் பலர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல். இன்னும் இரண்டு நாட்களை செலவு செய்யாமல் கடக்கும் வேட்பாளர்கள், வெற்றியோ - தோல்வியோ கடன் வலையில் சிக்காமல் தப்பித்து விடலாம்.


கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி இருக்கிறார். இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும்மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார்.

இதற்கெல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என, கடைசியாக எடுக்கப்பட்ட, 'சர்வே' முடிவுகள், தி.மு.க.,வுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன. அ.தி.மு.க., தரப்பு கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, பெரும்பாலான ஊர்களில் பட்டுவாடாவை முடித்து விட்டதால்,அக்கட்சியினரும், மேலிடத்தில் இருப்பவர்களும் தெம்பாக இருப்பதாகவும், தி.மு.க., தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தி.மு.க., தரப்பிலும் வாக்காளர்களை கவனித்தால் மட்டுமே, இழுபறியாக இருக்கும் பல தொகுதிகளில் ஒன்றிரண்டாவது பிடிக்க முடியும் என, கள தகவல்கள் சொல்வதால், மேலிடத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் நொந்து போயிருப்பவர்கள் வசதி குறைவான வேட்பாளர்கள். திருத்தணி சந்திரன் நகர செயலராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்து நிறைய சம்பாதித்தவர் தான். ஆனால், கட்சிக்காக நிறைய செலவழித்து விட்டதால், தற்போது கையில் பணமில்லை. அதை சொன்னால் தலைமை ஏற்க மறுக்கிறது. '5 கோடி ரூபாய் செலவழிப்பேன் என்று சொல்லிதானே, 'சீட்' வாங்கினீர்கள்' என, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

திருநெல்வேலி ஏ.எல்.எஸ்.லட்சுமணன். இவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர். அப்பாவும் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஆனால், கை சுத்தம்; அதனால் வாய் நீளம். நேர்காணலிலேயே, 'என்னிடம் சல்லி பைசா கிடையாது. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன்; நாந்தான் திரட்ட வேண்டும் என்றால் எனக்கு சீட்டே வேண்டாம். யாரை நீங்கள் வேட்பாளராக நிறுத்தினாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்' என்றவர்.

அதன் பிறகும் அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டு, இன்று வரை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை மேலிடம். 'கடன் வாங்கி செலவு செய்யுங்கள்; தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்' என, அறிவாலயத்தில் இருந்து போன் போட்டு சொன்னால், 'தோற்று விட்டால், கடனை எப்படி அடைப்பேன்?' என, கேட்கிறார் லட்சுமணன். அதே நிலை தான், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வஹாபுக்கும். நிறைய செலவழிக்க முடியும் என்று நேர்காணலில் சொல்லிவிட்டார்.


latest tamil newsஆனால், அதற்கு முன்பே கட்சிக்காக நிறைய கடன் வாங்கி செலவழித்து விட்டதால், வேட்பாளர் ஆன பின், அவர் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கவில்லை. மேலிட நெருக்கடி அதிகமாவதால், எதிரில் வரும் எல்லாரிடமும் கடனுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறார். இந்த மூவரைப் போலவே, மதுரவாயலில் காரம்பாக்கம் கணபதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சங்கராபுரம் உதயசூரியன், நன்னிலம் ஜோதிராமன், கடலுார் அய்யப்பன், திரு.வி.க., நகர் தாயகம் கவி, கே.வி.குப்பம் சீதாராமன், குடியாத்தம் அமலு, ஆத்துார் சின்னதுரை, தாராபுரம் கயல்விழி, வேதாரண்யம் வேதரத்தினம், திருவிடைமருதுார் கோவி செழியன், சங்கரன்கோவில் ராஜா என, பணப் பிரச்னையில் சிக்கி தடுமாறும், தி.மு.க., வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தி.மு.க., நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என பரவலாக பேசப்பட்டதால், அக்கூட்டணியின் வேட்பாளர்கள் உற்சாகமாக இருந்தனர். இப்போது நிலவரம் கலவரமாகி விட்டது என தெரிந்ததும், கடன் தருவதாக உறுதி அளித்தவர்கள்கூட போன் போட்டால் எடுப்பது இல்லை. இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் பலர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல். இன்னும், இரண்டு நாட்களை செலவு செய்யாமல் கடக்கும்வேட்பாளர்கள், வெற்றியோ - தோல்வியோ கடன் வலையில் சிக்காமல் தப்பித்து விடலாம்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஏப்-202104:50:21 IST Report Abuse
meenakshisundaram மேலிடமே (திமுக) மன உளைச்சலில்தானே இருக்கு ?திமுகவுக்கு சனி யின் வெளி ஆரம்பிச்சாச்சு .இனிமே அவங்க வீட்டு பொம்பளைங்க திருநள்ளாறு போய்தான் கொஞ்சம் பிரார்த்தனை பண்ணனும்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
04-ஏப்-202122:37:12 IST Report Abuse
bal இவனுங்களுக்கு வோட்டு போடுங்க ...ஜெயிச்சபிறகு கொரோனவால் சாகட்டும்...நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
04-ஏப்-202115:32:00 IST Report Abuse
மலரின் மகள் " ஸ்வஸ்திக்". ..........அயோக்கியர்களுக்கு வாக்குகளை கனவிலும் தரவேண்டாம்............. இன்றும் நாளையும் ஒருவழியாக தீர்மானத்திற்கு வரவேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது................ பெரும்பாலானவர்கள் வாக்களிக்கும் மனநிலையில் ஆரம்பம் முதலே இருப்பார்கள். அவர்களின் பங்கு அறுபது சதவீதம் வரை தோராயமாக இருக்கும். அனைவரும் வாக்களிக்கவேண்டும். முதலில் வாக்கு சதவீததத்தை எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேளாக்கவேண்டும். என்பது சதவீதத்திற்கு மேல் வாக்களிக்கும் தொகுதி மற்றும் பகுதி மக்களுக்கு தேர்தல் கமிஷன் சில வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் அதற்கு பண ஒதுக்கீடு செய்து தரவேண்டும். உதாரணத்திற்கு அந்த பகுதி மற்றும் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிழற்குடை அமைத்து தவறுவது, குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி தருவது என்று. அதிக வாக்களித்த மக்களுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரமும் நன்றியும் என்ற வகையில் அது அமையலாம்................ அடுத்து யாருக்கு வாக்களிக்கலாம் என்று தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். தொகுதியில் சிறந்த வேட்பாளர்கள் அவர்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களை அறிந்து அதை திறம்பட செய்பவர்களாகவும் வெற்றி பெற்றபிறகு பச்சோந்தி போல அதன் பிறகு நிறம் மாறாதவர்களாகவும் இருக்கவேண்டும். அதை அறிவது மிகவும் கடினம். தொகுதிக்கு பரிச்சியமானவர்களை மட்டுமே மக்களுக்கு தெரியும். மற்றவர்களை தெரிந்து கொள்வது கடினம்............... ஆகையால் வழக்கம்போல பணத்திற்கு வாக்குகள் என்று கொள்ளாமல் மனதின் குரலுக்கு வாக்குகள் என்று வாக்களிக்கவேண்டும்........... பணம் பெற்றவர்கள் பணம் கொடுத்த கட்சிக்கு எதிராக வாக்களிக்க விரும்பவில்லை அது தார்மீகப்பலத்தை பாதிப்பதாக என்று உணர்ந்தால், அவர்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் நோட்டாவிற்கு அளித்து பணம் பெற்றவர்களுக்கு எதிராகவும் வாக்களிக்கவில்லை அதே சமயம் தெரிந்தே அவர்களை பிரதிநிதியாகவும் விரும்பவில்லை என்ற வகையில் நோட்டாவிற்கு அங்கீகாரம் தரலாம்........முதலில் ஒதுக்கப்படவேண்டியவர்கள் அவர்களே ................. அடுத்து கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மறந்தும் வாக்களித்து விடாதீர்கள். மிகப்பெரிய தவறு அது. நமக்கும் நமது சமுதாயத்திற்கும் செய்யும் தீமை அது. தெரிந்தே கொடும்செயல் அல்லது பாவத்தை செய்யவேண்டாம். வரலாறு நமக்கு அழகாக சொல்லி தந்திருக்கிறது. வெற்றி பெற்று மந்திரிகளாகி அதன் பிறகு விவஸ்யிகளை மிரட்டியும், தனியாக கடத்தி சென்று அடித்து உதைத்தும் பூர்விக சொத்துக்களை பிடுங்கியிருக்கிறார்கள். நமக்கு அது தெரியும். செய்திகளாக வந்திருக்கின்றன. முரட்டு பக்தர்களாக வெளியே சொல்லிக்கொண்டும் தனிமனித மற்றும் தன் தலைவனை போற்றி சாதிக்க நினைப்பதை சாதித்து கொள்வதுமாக இருக்கும் அது போன்றவர்களை நிச்சயம் ஒதடுக்கவேண்டும். நாம் அளிக்கும் ஓட்டுக்கள் உண்மையில் பலருக்கு தனிப்பட்டமுறையில் மிக பெரிய இழப்புக்களை அவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வருவதால் ஊறுவிளைவிக்கும். தார்மீக மற்றும் தர்ம நீதியில் நாம் தான் முதல் குற்றவாளி அவர்களை தெரிந்தே தேர்ந்தெடுப்பதால். அத்தகைய பாவம் வேண்டாம்.......... நிறைய வேட்பாளர்கடல் இந்த தேர்தலில் அப்படி காலம்காண்கிறார்கள். தவிர்க்க படவேண்டியவர்கள் கண்முன்னே உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரிகிறார்கள். நமது பொன்னான வாக்குகள் எதற்காக அவர்களுக்கு செல்லவேண்டும். கட்சி பாடுபாடின்றி அவர்களை தவிர்ப்போம். வேண்டாம் நமது ஓட்டுக்கள் அவர்களுக்கு.............. கோரப்பசியில் இருக்கிறார்கள் வெற்றி பெற்று நாட்டின் வளத்தை சுரண்டி தனதாக்கி கொள்ள. அவர்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டி இட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஒதுக்கினால் அவர்களின் வாரிசுகள் மட்டுமே தேர்தல் களம் காண முடியும் என்ற நிலை உள்ளது. வாரிசுகளையும் ஒதுக்குவோம்........... யாரையும் வடிகட்டி இவர்களுக்கு இறுதியில் வாக்களிக்கலாம் என்று நினைத்தால் இப்போரில் சிறப்பானவர்களாக நமக்கு யாரையும் தெரியவில்லை என்று பல சீனியர் சிட்டிசென்கள் வருத்தப்பட்டு வீட்டிலேயே இருந்து விடுவார்கள்... அதனால் வாக்கு சதவீதம் குறையும். நாம் விரும்புவது என்ன? நல்லவர்கள் வரவேண்டும். நல்லவர்களை காட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. என்ன செய்வது என்று அமைதிகாக்காமல். அவர்களும் தேர்தல் கமிஷனும்மும் அங்கீகாரம் பெற்ற கத்தி தலைவர்களுக்கும் புரியும்படி சொல்வதற்கு நோட்டாவை பயன்படுத்தலாம். நோட்டாவிற்கு வாக்குகள் கூடுதலாகி வரும்போது தேத்தல் கமிஷன் குற்றப்பின்னணி உள்ளோரை போட்டியிட அனுமதிக்காதக் நிலையை ஏற்கும்..... கட்சிகளும் அவர்களை ஒதுக்கும்..... மாற்றத்திற்கான ஒளிதெரியும்......... மீண்டும் ஒரு தேர்தல் வருவதாயிருந்தால் அதை ஏற்போம். அடுத்து வருவது நிச்சயமாக மேம்படுத்தப்பட்டே இருக்கும் என்பது திண்ணம்......... ராமன் ஆண்டாலும் ராவணனை ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று கொள்ளாமல், துச்சாதனர்கள் நாட்டை ஆளவே கூடாது என்று முடிவெடுக்கவேண்டும். யார் வேண்டாம் என்பதை தெளிவாக அறிந்து ஒதுக்குவது மிகவும் சுலபம்............... லஞ்சத்தை ஒழிப்பேன் என்று யாரும் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. டிஜிட்டல் முறையில் அனைத்தையும் வெளிப்படையாக்கி ஒளிவு மறைவின்ரி சேவைகளை மக்களுக்கு தருவோம் என்று யாரும் வாக்குறுதி தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மேம்படுத்தி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க உத்திரவாதம் தர யாரும் தயாரில்லை................ நல்லவர்களுக்கு வாக்களிக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, அயோக்கியர்களுக்கு வாக்குகளை கனவிலும் தரவேண்டாம்................... சிந்திப்போம். தேர்தல் காலத்தில் ஸ்வஸ்திக் சின்னம் மூலம் பாடம் புகட்டுவோம். தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி சுதந்திரமாக மக்களாட்சியின் உன்னதத்தை பறை சாற்றை வருகிறது தேர்தல் வாய்ப்பு. பயன்படுத்துவோம். நம் அனைவருக்குமான எங்களது மாலை நேர பிரார்த்தனைகள். நன்றி.
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
04-ஏப்-202116:46:07 IST Report Abuse
Naresh Giridharயார் ஆள வேண்டும் என்று மக்கள் என்றோ முடிவெடுத்து விட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X