பீர்க்கை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை| Dinamalar

தமிழ்நாடு

பீர்க்கை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

Added : ஏப் 04, 2021
Share
உசிலம்பட்டி,உசிலம்பட்டி சந்தையில் பீர்க்கங்காய் விலை வீழ்ச்சியுற்றதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் தேவைப்படாத வெண்டை, பீர்க்கங்காய் போன்றவற்றை கிணற்று பாசனம் மூலம் பயிரிடுகின்றனர். கிலோ ரூ. 20 க்கு விற்ற பீர்க்கங்காய் சில நாட்களாக ரூ.5க்கு விற்பனையாகிறது. காய்களை சேகரிக்கும் கூலிக்கு கொடுக்க கூட விலை கிடைக்கவில்லை என

உசிலம்பட்டி,உசிலம்பட்டி சந்தையில் பீர்க்கங்காய் விலை வீழ்ச்சியுற்றதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் தேவைப்படாத வெண்டை, பீர்க்கங்காய் போன்றவற்றை கிணற்று பாசனம் மூலம் பயிரிடுகின்றனர். கிலோ ரூ. 20 க்கு விற்ற பீர்க்கங்காய் சில நாட்களாக ரூ.5க்கு விற்பனையாகிறது. காய்களை சேகரிக்கும் கூலிக்கு கொடுக்க கூட விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.விளாம்பட்டி விவசாயி லட்சுமணன் கூறியதாவது: நான்கு ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி, விதை, உரம் நடவு வரையில் ரூ. 65 ஆயிரம் செலவானது. பீர்க்கைக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். 55 நாட்களில் காய்ப்புக்கு வரும். உரம், மருந்து தெளித்தால் இரண்டு மாதங்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ விளைச்சல் கிடைக்கும். குறைந்தபட்சம் கிலோவிற்கு ரூ. 15 கிடைத்தால் தான் லாபம் கிடைக்கும். கிலோ ரூ.5 வரை தான் விற்பனையாகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X